• Fri. Dec 20th, 2024

24×7 Live News

Apdin News

கரும்பு ஜூஸ் குடிக்கிறீங்களா?.. காத்திருக்கும் ஆபத்து – ICMR எச்சரிக்கை | கரும்பு ஜூஸ் குடிக்கிறீங்களா?.. காத்திருக்கும் ஆபத்து

Byadmin

Dec 20, 2024


இந்தியாவில் நிலவி வரும் அதீத வெயில் காரணமாக மக்கள் கடும் அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தங்களின் உடலை நீரேற்றத்துடன் குளுமையாக வைத்துக்கொள்ள ஜூஸ்களையும் குளிரூட்டயப்பட்ட சாஃப்ட் ட்ரிங்ஸ்களையும் அருந்திவருகின்றனர். அதிலும் முக்கியமாக கரும்பு ஜூஸை அனைவரும் விரும்பி உட்கொள்கின்றனர்.

இதனால் நகரங்கள் மற்றும் டவுன்களில் வீதிக்கு வீதி ஜூஸ் கடைகளும் கரும்புச்சாறு கடைகளும் முளைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் மக்களுக்கு பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அளவுக்கு மீறி அருந்தும்பொழுது கரும்புச்சாற்றில் உள்ள அதீத சர்க்கரை அளவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரோக்யமான உணவு முறை குறித்து ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய ஊட்டச்சத்து கழகம் (NIN) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோடைக் காலங்களில் இந்தியாவில் உள்ள மக்கள் அதிகம் உட்கொள்ளும் பானமாக கரும்புச்சாறு உள்ளது. 100 மில்லி லிட்டர் கரும்புச்சாற்றில் 13-15 கிராம் அளவில் சர்க்கரை உள்ளது. இது அதிகப்படியான சர்க்கரை அளவு என்பதால் மக்கள் கரும்புச்சாறு அருந்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடபட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், பழச்சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் பழங்களை ஜூஸ் போடாமல் அப்படியே சாப்பிடும்போதுதான் அதிலுள்ள பைபர் மற்றும் நியூட்ரியண்ட் சத்துக்கள் கிடைக்கும், பழத்தை ஜூஸ் போட்டு அருந்தும்போது பழத்தின் மொத்த சத்தில் 100-150 கிராம் அளவு சத்து மட்டுமே உடலில் சேரும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செயற்கை நிறமிகள் சேர்க்க்கப்பட்ட கார்பன் ஏற்றம் செய்யப்பட்ட சாஃப் டிரிங்ஸ்களைத் தவிர்த்து அதற்கு பதிலாக மோர், இளநீர், சர்க்கரை சேர்க்கபடாத பழச்சாறுகள் ஆகியவற்றை அருந்தலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

By admin