பட மூலாதாரம், ANI
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய், சிபிஐ முன்பு இன்று மீண்டும் ஆஜராகிறார்.
சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக, அவர் நேற்றே டெல்லி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவரிடம் கடந்த 12ஆம் தேதி சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது.
சுமார் 6 மணி நேரம் நீடித்த அந்த விசாரணையில் கூட்டத்துக்குத் தாமதமாக வருகை தந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, கூட்ட மேலாண்மை, கரூர் நிகழ்வுடன் தொடர்புடைய அமைப்புசார்ந்த பொறுப்புகள் ஆகியவை தொடர்பாக சிபிஐ கவனம் செலுத்தியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறியிருந்தது.
விஜயிடம் மேலும் விசாரணை நடத்த சிபிஐ விரும்பியதாகவும், பொங்கலை முன்னிட்டு வேறொரு தேதியில் விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தெரிவித்ததாகவும் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. மற்றும் பிடிஐ செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
அதன் தொடர்ச்சியாக விஜய் இன்று மீண்டும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார். இந்த வழக்கில் சிபிஐ பதிவுசெய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய் பெயர் இல்லையென்றாலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.