• Mon. Oct 13th, 2025

24×7 Live News

Apdin News

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை: தவெக வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு | Supreme Court orders CBI probe in Karur TVK stampede case

Byadmin

Oct 13, 2025


புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தவெக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு, இன்று (அக்.13) வழங்கிய தீர்ப்பில், கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது. வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வழக்கு பின்னணி: கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசியல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​ கோரி வில்​லிவாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்​தரவை எதிர்த்து தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.



By admin