• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 11 குழந்தைகள் சிக்கியது எப்படி? பிபிசி கள ஆய்வு

Byadmin

Oct 4, 2025


விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள்
படக்குறிப்பு, விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 குழந்தைகள்

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்)

செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய ரோட் ஷோவை ஒட்டி ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 11 பேர் குழந்தைகள்.

இம்மாதிரியான ஒரு நெரிசல் மிகுந்த கூட்டத்திற்கு குழந்தைகள் எதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்? குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது தொண்டர்கள் மத்தியில் பேசிவந்தார். பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பேருந்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட இடத்திற்கு இதற்காக வரும் விஜய், அந்த வாகனத்தில் இருந்தபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

By admin