• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

கரூர்: விஜய் மெளனம் கலைத்த பிறகு அரசு வெளியிட்ட வீடியோக்கள்

Byadmin

Oct 1, 2025


'கரூரில் மட்டும் ஏன் இப்படி? உண்மை வெளியே வரும்' -  விஜய் பேசியது என்ன?

பட மூலாதாரம், tvk

‘கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்’ என கரூர் நெரிசல் சம்பவம் குறித்து வீடியோ மூலம் விஜய் பேசியுள்ளார்.

சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அரசு சார்பிலும் வீடியோக்கள், படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கூட்ட நெரிசல், மின் தடை குறித்து அரசுத்தரப்பில் விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் சமூக ஊடங்களில் வெளியிட்ட வீடியோவில், “என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்.” என பேசியுள்ளார்.

By admin