• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

கர்நாடகாவில் இஸ்ரேலை சேர்ந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம், தடுக்க வந்த நபர் கொலை – என்ன நடந்தது?

Byadmin

Mar 8, 2025


கர்நாடகா பாலியல் வல்லுறவு , Karnataka rape, இஸ்ரேல் சுற்றுலா பயணி பாலியல் வல்லுறவு, பாலியல் வன்கொடுமை, வெளிநாட்டுப் பயணி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலாப் பயணி உள்பட இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதோடு, அவர்களைக் காப்பாற்ற வந்த ஒருவரைக் கொலை செய்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையினர் பிபிசிக்கு அளித்த தகவலின்படி, இஸ்ரேலை சேர்ந்த 27 வயது சுற்றுலாப் பயணி, 29 வயது உள்ளூர் பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தார்.

இவர்களுடன் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் மற்றும் மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என 3 ஆண்களும் உடன் சென்றிருந்தனர்.

மார்ச் 6ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு ஐந்து பேரும் ஹம்பி அருகே உள்ள சனாபூரில் இருக்கும் துர்கையம்மன் கோவிலுக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

By admin