• Wed. Jan 21st, 2026

24×7 Live News

Apdin News

கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்

Byadmin

Jan 21, 2026


கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை “நல்லதல்ல” என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க “கடுமையாகப் போராட வேண்டும்” என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு “நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. ‘தி லான்செட்’ மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து “பல நிபுணர்கள்” கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர்.

கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் ‘அசிட்டமினோஃபென்’ என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

By admin