• Wed. Nov 6th, 2024

24×7 Live News

Apdin News

கர்ப்பிணி பெண்களுக்கு கால் வலி வராமல் இருக்க..! இந்த வகை காலணிகளைப் பயன்படுத்துங்கள்

Byadmin

Nov 6, 2024


கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு சில சமயங்களில் கால்களில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். தங்களது எடையை விட அதிக எடையை அவர்கள் தாங்குவதால் அவர்கள் கால்களுக்கு ஏற்ற சரியான காலணிகளை பயன்படுத்த வேண்டும்.

மாடர்னாக இருக்கிறதே என கவர்ச்சியான மிதியடிகளை பயன்படுத்து அவர்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே எந்த மாதிரியான காலணிகளை அவர்கள் அணியலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

தட்டையான காலணிகள்:

கால் மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பது கர்ப்ப காலங்களில் கால்களில் வலியை ஏற்படுத்தலாம். எனவே கால் மூட்டுகளுக்கு அழுத்தம் தராத காலணிகளை பயன்படுத்தலாம் தட்டையான காலணிகள் அதற்கு அதிகமாக உதவும் காலணிகளாக இருக்கின்றன.

கால்களுக்கு வசதியாக இருக்கும் ஸ்னீக்கர்களை கர்ப்ப காலத்தில் பயன்படுத்தலாம். ஸ்னீக்கர்களில் கர்ப்பிணி பெண்களுக்கு என்றே தனியாக கிடைக்கின்றன. அவற்றை அணிவது பாதத்திற்கு சுலபமானதாக இருக்கும்.

சாண்டல்கள்:

வெப்பமான காலங்களில் நமது கால்கள் அதிக வறட்சியடையும். பொதுவாக கர்ப்ப காலத்தில் நடப்பது அதிக சோர்வை ஏற்படுத்தும். இதற்கு நடுவே இந்த கால் வறட்சி மேலும் சோர்வை ஏற்படுத்தும். இதனை தடுக்க சாண்டல்களை பயன்படுத்தலாம். இவை வெயில் காலங்களிலும் கூட பாதங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும்.

கர்ப்ப கால சிறப்பு காலணிகள்:

கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு என்றே சிறப்பான காலணிகள் தயாரிக்கப்படுகின்றன. மருந்தகங்களில் இந்த காலணிகள் கிடைக்கின்றன. கர்ப்ப காலத்தில் நடக்கும் பெண்களுக்கு ஏதுவாக இருக்கும் விதத்தில் இந்த காலணிகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த காலணிகள் எல்லாம் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு நடப்பதை எளிதாக்கும் காலணிகளாக இருக்கின்றன.

By admin