• Mon. Sep 1st, 2025

24×7 Live News

Apdin News

கலவரத்திற்கு பின் முதன்முறையாக மணிப்பூர் செல்லவுள்ள பிரதமர் மோடி!

Byadmin

Aug 31, 2025


இந்தியா – மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதியன்று, மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அது பின்னர் கலவரமாக மாறியது.

இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள், தமது வீடுகளை இழந்து முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தற்போது வரை மணிப்பூரில் மெய்தி- குகி பிரிவினருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

எனினும், கலவரத்தால் பெருதும் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இந்தியப் பிரதமர் மோடி ஒருமுறைகூட விஜயம் செய்யதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

உலகம் முழுவதும் பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு, மணிப்பூர் மாநிலத்தைப் பார்வையிட்டு, அங்குள்ள மக்களைச் பார்க்க நேரமோ, ஆர்வமோ இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் முதல் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளின் பின்னர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் வாரத்தில் பிரதமர் மோடி அங்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசுவதுடன், பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.

By admin