• Tue. Sep 9th, 2025

24×7 Live News

Apdin News

கலாச்சார ரீதியாக இணையும் கேம்பர்லீ நகரமும் மதுரையும்: பென்னி குயிக் நினைவை போற்றும் விதமாக ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு | Camberley and Madurai to be Culturally connected

Byadmin

Sep 9, 2025


​சென்னை: தமிழகத்​தின் தென் மாவட்​டங்​களின் முக்​கிய நீரா​தா​ர​மாக விளங்​கும் முல்​லைப் பெரி​யாறு அணையை கட்​டிய பிரிட்​டிஷ் பொறி​யாளர் பென்னி குயிக் நினைவை போற்​றும்​வித​மாக அவர் பிறந்த கேம்​பர்லீ நகர​மும் மதுரை​யும் கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தில் ஒருங்​கிணைக்​கப்பட உள்​ள​தாக தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன.

18-ம் நூற்​றாண்​டில் தென் தமிழகத்​தில் மழை​யின்றி பல ஆறுகள் வறண்​ட​தால் பஞ்​சம் அதி​கரித்​தது. இதற்​காக முல்​லைப் பெரி​யாற்​றில் அணை கட்​டும் திட்​டத்தை ஜான் பென்னி குயிக் உரு​வாக்​கி​னார். கடும் பொருளா​தார நெருக்​கடிக்கு மத்​தி​யில் தனது சொத்​துகளில் பெரும்​பகு​தியை விற்று அணையைக் கட்டி முடித்​தார். இவரது நினைவை போற்​றும் வகை​யில் தேனி மாவட்​டம் கூடலூரில் மணிமண்​டபம் கட்டி தென்​தமிழக மக்​கள் வழிபட்டு வரு​கின்​றனர். மேலும், பென்னி குயிக் பிறந்த கேம்​பர்லி நகரப் பூங்​கா​வில் தமிழக அரசு சார்​பில் 2022-ல் அவருக்கு சிலை​யும் அமைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், புதிய தொழில் முதலீடு​களை ஈர்க்​கும் பயணத்​தின் ஒருபகு​தி​யாக இங்​கிலாந்​தின் லண்​டன் சென்ற முதல்​வர் பென்னி குயிக் குடும்​பத்​தினரை சந்​தித்​தார். தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்​களின் கோரிக்​கைகள் அடிப்​படை​யில் மதுரை மற்​றும் கேம்​பர்லீ நகரங்​கள் கலாச்​சார இணைப்​புத் திட்​டத்​தின்​கீழ் கொண்​டு​வரப்பட உள்​ள​தாக​வும் தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

இதுதொடர்​பாக கேம்​பர்லீ தமிழர் பிரிட்​டிஷ் அசோசி​யேஷன் செய​லா​ளர் சந்​தான பீர் ஒலி கூறிய​தாவது: கலாச்​சார இணைப்​புத் திட்​டம் (Twinning of Cities) என்​பது இரு​நாடு​களைச் சேர்ந்த முக்​கிய நகரங்​கள் ஒருங்​கிணைக்​கப்​படும். இதன்​மூலம் கல்​வி, சுற்​றுலா, வர்த்​தகம் உட்பட பல்​வேறு துறை​கள் சார்ந்த சிறப்​பம்​சங்​களை இருநகரங்​களும் பரி​மாறிக் கொள்​ளும். அதன்​படி தமிழகத்​தில் சென்​னை, கோயம்​புத்​தூர், திருச்சி ஆகிய நகரங்​கள் ஏற்​கெனவே அமெரிக்​கா, சீனா, ஜெர்​மனி, மலேசியா உள்​ளிட்ட நாடு​களில் உள்ள முக்​கிய நகரங்​களு​டன் இணைக்​கப்​பட்​டுள்​ளன. அந்​தவகை​யில் நூற்​றாண்டு காலம் தொடர்​புள்ள கேம்​பர்லீ மற்​றும் மதுரை நகரங்​களும் இத்​திட்​டத்​தின்​கீழ் இணைக்​கப்பட உள்​ளன.

தமிழர் பண்​பாட்டை மதுரை நகரம் முழு​மை​யாக பிர​திபலித்து வரு​கிறது. கோயில்​களின் பாரம்​பரிய விழாக்​கள் ஆகிய​வற்​றின் வழி​யாக மதுரை உலகம் முழு​வதும் தமிழர் பண்​பாட்​டின் மையமாகப் போற்​றப்​படு​கிறது. அதே​போல், கேம்​பர்லீ நகர​மும் கல்​வி, வரலாறு, சமூக மேம்​பாடு, சுற்​றுலா ஆகிய துறை​களில் தனித்​து​வ​மாக விளங்​கு​கிறது. இவ்​விரு நகரங்​களும் ஒருங்​கிணைந்​தால் பல்​வேறு பலன்​களை தமிழகம் பெறும்.

கேம்​பர்லீ நகரத்​தில் 6 பெரிய பல்​கலைக்​கழகங்​கள் உள்​ளன. அவற்​றில் மதுரை மாணவர்​கள் இளைஞர் பரி​மாற்​றத்​தில் கல்வி பயிலலாம். கீழடி உட்பட தொன்​மங்​கள் குறித்து ஆராய்ச்​சிகளை தீவிரப்​படுத்​தலாம். மதுரை​யின் கோயில்​கள், விழாக்​கள், கைவினைப் பொருட்​கள் மூல​மாக நமது கலாச்​சா​ரம் உலகளா​விய வரவேற்பை பெறும். புதிய தொழில் முதலீடு​கள் வரும். சுற்​றுலாவை மேம்​படுத்​து​வதுடன் விமானப் போக்​கு​வரத்தும் விரிவு செய்​யப்

பட வாய்ப்​புள்​ளது.

இத்​தகைய அம்​சங்​களை முன்​வைத்து முதல்​வர் ஸ்டா​லினிடம் கோரிக்கை வைத்​தோம். இது​சார்ந்து கேம்​பர்லீ நகரம் அமைந்​துள்ள சர்ரே மாகாணத்​தின் மேயரும், கலாச்​சார இணைப்பு திட்​டத்​தில் சேர சம்​மதம் தெரி​வித்து முதல்​வர் ஸ்டா​லினுக்கு கடிதம் எழு​தி​யிருந்​தார். அதையேற்று கடந்த வாரம் லண்​டன் வந்​திருந்​த​போது இத்​திட்​டத்தை முன்​னெடுப்​ப​தாக முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். இதன்​மூலம் இருநகரங்​களும் சிறந்த வளர்ச்​சியை பெறும்.

இவ்​வாறு அவர் கூறி​னார்.

பென்​னிக் குயிக் குடும்​பத்​தினர் லண்​டனில் பென்னி குயிக் பேத்​தி​கள் மேரி மற்​றும் செர்லீ ஆகியோரிடம் முதல்​வர் பேசி​னார். அப்​போது, “தாங்​கள் அவ்​வப்​போது தமிழகம் வந்​துசெல்ல வேண்​டும். அங்கு யாரு​மில்லை என நினைக்க வேண்​டாம். தமிழகத்​தில் உள்ள அனை​வரின் இல்​ல​மும் தங்​களை வரவேற்​கும். அதில் முதல் வீடாக எனது இல்​லத்தை நினைத்​துக் கொள்​ளுங்​கள். மேலும், ஏதேனும் உதவி​கள் தேவை என்​றாலும் நீங்​கள் தயக்​கப்​ப​டா​மல் கேளுங்​கள்” என்று முதல்​வர் உரிமை​யுடன் பேசி​யுள்​ளார்.

இதை கேட்டு மகிழ்ச்​சி​யில் கண்​கலங்​கிய பென்னி குயிக் குடும்​பத்​தினர், நிச்​ச​யம் தமிழகம் வரு​வ​தாக​வும் உறுதி தெரி​வித்​தனர். பொங்​கல் திரு​விழா, ஜல்​லிக்​கட்டு மற்​றும் மதுரை- கேம்​பர்லீ நகரங்​கள் இணைப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​க​வும் அழைப்பு விடுத்​தார். இதைக் கண்டு நெகிழ்ந்த அந்த நாட்​டின் பிர​முகர்​கள் தமிழர்​களின் நன்​றி​யுணர்வு வியக்​க வைப்​ப​தாக பெரு​மை​பட பேசி​ய​தாக பிரிட்​டன்​ வாழ்​ தமிழர்கள் தெரிவித்தனர்.



By admin