அமெரிக்கா – கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகர் சேக்ரமெண்ட்டோவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இதில் மூவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், மருத்துவச் சேவைகளை வழங்கிவந்தது.
குறித்த ஹெலிகாப்டர் மருத்துவமனைக்குச் செல்லும்போது அல்லது அங்கிருந்து திரும்பும்போது விபத்து நேர்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
The post கலிபோர்னியா ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் கடும் காயம்! appeared first on Vanakkam London.