• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

கல்பனா சாவ்லா உயிர் பறிபோன பிளாக் அவுட் டைம் – சுனிதா பூமிக்கு வரும்போது நடந்தது என்ன?

Byadmin

Mar 21, 2025


காணொளிக் குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ்

கல்பனா சாவ்லாவின் உயிர் பறிபோன ‘பிளாக் அவுட் டைம்’ – சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வரும்போது சில நிமிடங்கள் என்ன ஆனது?

மார்ச் 19, 2025 (இந்திய நேரப்படி அதிகாலையில்) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ், ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் பத்திரமாகத் தரையிறங்கும் தருணத்தை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3.15 மணிக்கு, அந்த விண்கலத்துடனான பூமியின் தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

அப்போது விண்கலம், பூமியிலிருந்து 70 முதல் 40 கி.மீ உயரத்திலும், மணிக்கு சுமார் 27,000 கி.மீ வேகத்திலும் பயணித்துக் கொண்டிருந்தது. விண்கலத்தைச் சுற்றி 1927 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

ஆறு முதல் 7 நிமிடங்களுக்கு டிராகன் விண்கலத்தில் என்ன நடக்கிறது, அது எங்கு இருக்கிறது என்று நாசாவின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த எவருக்கும் தெரியவில்லை. 3.20 மணிக்கு, நாசாவின் WB57 எனும் கண்காணிப்பு விமானத்தின் கேமராக்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த டிராகன் விண்கலத்தைப் படம் பிடித்தன.

அதன் பிறகே, நாசா கட்டுப்பாடு அறையில் இருந்தவர்களால் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது. அடுத்த சில நிமிடங்களில் டிராகன் விண்கலத்துடனான தொடர்பு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

By admin