0
அண்மையில் வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற ‘லோகா ‘படத்தை தொடர்ந்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் எஸ். திரவியம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், தேவதர்ஷினி, வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
வித்தியாசமான கதை கள பின்னணியில் தயாராகும் இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர் .பிரகாஷ் பாபு – எஸ். ஆர். பிரபு – பி. கோபிநாத் – ஆர். தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் தொடக்க விழா மற்றும் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு அதிதிகளாக வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாகவும், படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் போன்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.