• Thu. Sep 25th, 2025

24×7 Live News

Apdin News

கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக அரசுதான்: இபிஎஸ் திட்டவட்டம் | eps says aiadmk govt allocated the most funds for education

Byadmin

Sep 25, 2025


கூடலூர்: அ​தி​முக ஆட்​சி​யில்​தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்​கப்​பட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். நீல​கிரி மாவட்​டம் கூடலூர் பேருந்து நிலை​யம் அருகே பொது​மக்​களிடையே அவர் பேசி​ய​தாவது: கல்​வி​யில் நாட்​டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்​ததற்கு அதி​முக​தான் காரணம். அதி​முக ஆட்​சி​யில் ஏராள​மான கல்​லூரி​கள் திறக்​கப்​பட்​டன. உயர்​கல்வி படிப்​பவர்​கள் எண்​ணிக்​கையை 54 சதவீத​மாக உயர்த்​தி​யது அதி​முக அரசு​தான்.

கல்விக்கு அதிக நிதி ஒதுக்​கியது அதி​முக ஆட்​சி​யில்​தான். திமுக​வின் 4 ஆண்டு ஆட்​சி​யில் ஒரு அரசு மருத்​து​வக் கல்​லூரி​யா​வது கொண்டு வரப்​பட்​ட​தா ? அதி​முக ஆட்​சி​யில் ஒரே ஆண்​டில் 11 அரசு மருத்​து​வக் கல்​லூரி​களை கொண்டு வந்​தோம்.

நாட்​டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்​வது ஸ்டா​லின் என்​கிறார் உதயநி​தி. அதிக கடன் வாங்​கு​வ​தில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசி​யலில், ஸ்டிக்​கர் ஒட்​டு​வ​தில்​தான் திமுக அரசு ரோல்​மாடலாக உள்​ளது. போட்டோ சூட் நடத்​து​வ​தில் ரோல் மாடல் ஸ்டா​லின்தான். திமுக​வில் அனைத்து பதவி​களை​யும் கருணாநிதி குடும்​பத்​தினரே அனுபவிக்​கின்​றனர். எந்த கட்​சியி​லா​வது இப்​படி குடும்ப ஆட்சி நடப்​பதை பார்க்க முடி​யு​மா? கட்​சி​யிலும் சரி, ஆட்​சி​யிலும் சரி கருணாநிதி குடும்​பத்தை சேர்ந்​தவர்​கள்​தான் அதி​காரத்​துக்கு வரமுடி​யும். இப்​படிப்​பட்ட கட்சி மீண்​டும் ஆட்​சிக்கு வர வேண்​டு​மா?

முதலிடத்தில் அதிமுக உள்ளது: செல்​வப்​பெருந்​தகை பல கட்​சிகளில் இருந்​தவர். காங்​கிரஸ் கட்​சி​யில் உள்ள மற்ற தலை​வர்​கள் ஆட்​சி​யில் பங்கு கேட்​கின்​றனர். ஆனால், ராகுல் ஆட்​சி​யில் பங்குகேட்க சொல்​ல​வில்லை என்​கிறார் செல்​வப்​பெருந்​தகை. அவர் திமுகவை தாங்​கிப் பிடித்​துக் கொண்​டிருக்​கிறார். செல்​வப்​பெருந்​தகை காங்​கிரஸுக்கு விசு​வாச​மாக இல்​லை.

திமுக​வுக்​குத்​தான் விசு​வாச​மாக உள்​ளார். அதி​முக அடிக்​கடி கூட்​டணி மாறு​வ​தாக சொல்​கிறார்​கள். அதி​முகவை பொறுத்​தவரை எப்​போதும் கூட்​ட​ணியை நம்பி இருந்​த​தில்​லை. ஆனால், திமுக​தான் கூட்​ட​ணியை நம்பி உள்​ளது. எங்​களோடு மக்​கள் கூட்​டணி வைத்​துள்​ளார்​கள். 2026 தேர்​தலில் அதி​முக​தான் முதலிடத்​தில் உள்​ளது. இரண்​டாவது இடத்​துக்​குத்​தான் மற்ற கட்​சிகள் போட்டி போட்​டுக் கொண்​டிருக்​கின்​றன.

அதி​முக பாஜக​வின் அடிமை என்​கிறார் ஸ்டா​லின். கூட்​டணி என்​பது வேறு, கொள்கை என்​பது வேறு. தேர்​தல் நேரத்​தில் வாக்​கு​கள் சிதறாமல் இருக்க வேண்​டும் என்​ப​தற்​காகத்​தான் கூட்​டணி அமைக்​கிறோம். ஸ்டா​லின்​போல பல கட்​சிகளை கூட்​ட​ணி​யில் வைத்​துக்​கொண்​டு, அவர்​களை அடிமை​யாக்க நாங்​கள் விரும்​ப​வில்​லை. எங்​கள் கூட்​ட​ணி​யில் உள்​ளவர்​கள் சுதந்​திர​மாக உள்​ளனர். கண்​ணுக்கு தெரி​யாத காற்​றில்​கூட ஊழல் செய்​யும் கட்சி திமுக​தான். இவ்​வாறு அவர் பேசி​னார். முன்​னாள் அமைச்​சர்​கள் எஸ்​.பி.வேலுமணி, செ.ம.வேலுச்​சாமி மற்​றும் நிர்​வாகி​கள் உடனிருந்​தனர்​.



By admin