37
இயக்குநர் ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி தயாரித்து நடித்துள்ள ‘களம் காவல்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பாலகிருஷ்ணா கடைசி நேரத்தில் ‘அகண்டா 2’ படத்தை ரிலீஸ் செய்யாமல் ஏமாற்றி விட்ட நிலையில், மம்மூட்டி தென்னிந்திய த்ரில்லர் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட் கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘காந்தா’ திரைப்படம் முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி சுமாராகவும் போன நிலையில், படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. ஆனால், அப்பா அப்பாதான் என்பதை மம்மூட்டியின் ‘களம் காவல்’ திரைப்படம் கடைசி வரை ரசிகர்களை என்கேஜிங்காக வைத்து நிரூபித்துக் காட்டியுள்ளது.
மங்காத்தா படத்தில் அஜித் குமார் கடைசி வரை எப்படி கெட்டவனாகவே நடித்திருப்பாரோ அதே போல இந்த படத்தில் சைக்கோ கில்லராகவே மம்மூட்டி நடித்து மிரட்டியதை பார்க்கவே தாராளமாக தியேட்டருக்குப் போகலாம். ‘களம் காவல்’ படத்தின் கதை, பிளஸ், மைனஸ் என மொத்தத்தையும் அலசலாம் வாங்க..
‘களம் காவல்’ கதை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாகவும் விநாயகன் வில்லனாகவும் நடித்திருப்பார்கள். இங்கே அப்படியே தலை கீழாக மம்மூட்டி வில்லனாகவும் விநாயகன் கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். முன்னதாக பிரமயுகம் படத்திலும் மம்மூட்டி பேயாகவே நடித்து தூள் கிளப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மதக் கலவரத்திற்கு காரணம் ஒரு பையனும் ஒரு பெண்ணும் காதலித்து ஓடிப்போயிட்டாங்க என்கிற வழக்கை விசாரிக்க வரும் காவல் அதிகாரி விநாயகனுக்கு அந்த பையனும் பெண்ணும் ஓடிப்போகவில்லை என்றும் அந்த பெண் வேறு ஒருவருடன் காணாமல் போனது தெரிய வர, அந்த வழக்கை தோண்டி துருவி விசாரிக்க, அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மாறி மாறி வயதுக்கு வந்த பெண்கள், திருமணமாகி விவாகரத்தான பெண்கள், கணவனை இழந்த பெண்கள் என பல பெண்கள் காணாமல் போவதும், இறந்து கிடப்பதும் தெரிய வர யார் இப்படி கொடூரமாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொள்வது என தேடும் விநாயகன் சயனைடு பயன்படுத்திக் கொள்ளும் மம்மூட்டியை பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த களம் காவல் படத்தின் கதை.
நன்றி : tamil.filmibeat