0
கள்வர்களைப் பிடிப்பது நல்லது ஆனால் நாடும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவின் திசாநசாயக்க தெரவித்தார்.
அஸ்கிரிய பீடத்திற்கு விஜயம் செய்து நல்லாசிகள் பெற்ற பின் அவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரவித்தார்.
அவர் மேலும் தெரவிக்கையில்,
சில அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணம் உழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் திருடாமல் ஊழல்களில் ஈடுபடாமல் நேர்மையாக உழைத்திருப்பின் அதில் தவறில்லை. 1977 காலப்பகுதியில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனா கொண்டு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கையே அவ்வாறு பணமீட்ட வழிவகுத்துள்ளது.
அதே போல் அண்மையில் ரனில் விக்கிரமசிங்க ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டம் காரணமாகவே இன்று கள்வர்களைப் பிடிக்க முடிந்துள்ளது.
இன்று மின்சார சபை ஊழியர்களது போரராட்டம் பற்றிக் கேட்கப்பட்ட போது அன்று இதனையே கரு ஜயசூரிய கொண்டு வர முற்படட்டார். ஆனால் அன்று அதற்கு எதிர்ப்பு தெரிவிதம்தவர்கள் இன்று அதனையே மேற்கொள்கின்றனர். இப்படி எந்த விடயத்தை எடுத்தாலும் அது ஜக்கிய தேசியக்கட்சி கொண்டு வந்த கொள்கைகளை சார்ந்தாக உள்ளது.
ஜக்கிய தேசியக்கட்சியில் இருந்து பிரிந்தவரகெளே இப்போது ஜக்கிய மக்கள் சக்தியில் உள்ளனர். இப்பிரிவு காரணமா வாக்காளர்களில் சுமார் 15 இலட்சம் பேர் அளவில் வாக்களி்பில் கலந்து கொள்வதில்லை. எனலே ஜக்கிய தேசியக்கட்சியும், ஜக்கிய மக்கள் சன்தியும் ஒன்றிணைவதால், அல்லது ஒரே திசையில் பயணித்தால் மேற்படி வேறு பாடு நீங்கி தேர்தல்களில் அறுதிப் பெரும் பான்மையை பெற முடியும்.
எனவே இது போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு நாம் பயணித்தால் தேர்தல்களில் எம்மால் வெற்றி ஈட்ட முடியும் என்றார்.