• Fri. Aug 22nd, 2025

24×7 Live News

Apdin News

கவனத்தை ஈர்த்த மதுரை மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!

Byadmin

Aug 22, 2025


நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு, மதுரையில் நேற்று வியாழக்கிழமை (21) மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் உரையாற்றிய விஜய் தனது வழமையான பாணியில் குட்டி ஸ்டோரி சொன்னார். இதை அவரது இரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இதோ :

ஒரு சிங்கம் எப்போதும் பெக்கூலியர் தான். ஒரு முறை சிங்கம் கர்ஜித்தால் அந்த சத்தம் 8 கிமீ தூரம் அதிரும். அனைத்து திசைகளிலும் அதிரும். அப்படிப்பட்ட சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கை பார்க்க வராது.

வேட்டையில் கூட உயிரோடு இருக்கும் விலங்குகளை தான் வேட்டையாடும். அதிலும் தன்னை விட பெரிய மிருகங்களை குறிவைத்து தாக்கும் ஜெயிக்கும்.

எவ்வளவு பசியிருந்தாலும், உயிரில்லாதது கெட்டுப்போனதை தொட்டுப்பார்க்காது. அவ்வளவு பெரிய சிங்கம் எதையும் தொடாது. தொட்டால் விடாது.

தொடர்புடைய செய்தி : நடிகர் விஜய்யின் கட்சி கொடிக்கம்பம் சாய்ந்து கார் விபத்து!

காட்டுக்குள் எல்லையை வகுத்து கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்துக்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். தனியாக வர வேண்டும் என நினைத்தாலும் அஞ்சாமல் அலட்டிக்காமல் கெத்தா, தனியாக வந்து அத்தனைக்கும் தண்ணி காட்டும்.

எப்போதும் எதிலும் தனது தனித்தன்மையை இழக்காது. சிங்கம் எப்போதும் சிங்கமாகவே இருக்கும். காட்டில் நரிகள், குள்ளநரிகள் இருக்கலாம். ஆனால் அந்த காட்டின் ராஜா சிங்கம் தான்.

By admin