• Sun. Jun 22nd, 2025

24×7 Live News

Apdin News

கவனம் ஈர்க்கும் சுயாதீன திரைப்படம் ‘ மாயக்கூத்து’

Byadmin

Jun 21, 2025


வணிக ரீதியிலான சினிமாக்கள் வெளியாகி பார்வையாளர்களிடத்தில் வரவேற்பை பெறுவது போல் தற்போது சுதந்திர படைப்பாளிகளின் சுயாதீன திரைப்படங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்தப் பட்டியலில் ‘ மாயக்கூத்து’ எனும் திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் ஏ ஆர் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ மாயக்கூத்து ‘திரைப்படத்தில் மறைந்த நடிகர் டெல்லி கணேஷ், மு.  ராமசாமி , சாய் தீனா , பிரகதீஸ்வரன்,  நாகராஜன்,  முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி, ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஞ்சனா ராஜகோபாலன் இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ராகுல் மூவி மேக்கர்ஸ் மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ராகுல் தேவா மற்றும் பிரசாத் ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படைப்பாளிகளின் சமூக உணர்வை சுட்டிக்காட்டும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. பார்வையாளர்களுக்காக திரில்லராகவும் உருவாகி இருக்கிறது. ” என்றார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

By admin