கடந்த ஆண்டில் ‘கிஸ்’ எனும் தோல்வி படத்தையும், ‘மாஸ்க்’ எனும் வணிக ரீதியான வெற்றிப் படத்தையும் அளித்த நடிகர் கவின் கதையின் நாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில்.. நடனத்திலும், நடிப்பிலும் கவனம் ஈர்க்கும் சாண்டி மாஸ்டர் இணைந்து இருக்கிறார் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கவின் – பிரியங்கா மோகன் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் சாண்டி மாஸ்டர் இணைந்திருக்கிறார்.
இதற்காக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளனர். ஓஃப்ரோ இசையில் தயாராகி வரும் இந்த ஃபேண்டஸி ரொமான்டிக் கொமடி ஜேனரிலான திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் கவின் நடிப்பில் தயாராகி வரும் ஒன்பதாவது திரைப்படத்தில் பிரியங்கா மோகன் & சாண்டி மாஸ்டர் ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பது.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
The post கவின் உடன் இணையும் சாண்டி மாஸ்டர் appeared first on Vanakkam London.