• Sun. Sep 14th, 2025

24×7 Live News

Apdin News

கஷிஷ் மெத்வானி: அன்று ‘மிஸ் இந்தியா’, இன்று ராணுவ அதிகாரி – அழகுடன் ஒன்றிணைந்த வீரம்

Byadmin

Sep 14, 2025


அழகு ராணியாக இருந்து ராணுவத்திற்கு முன்னேறியுள்ள கஷிஷ் மெத்வானி

பட மூலாதாரம், Kashish Methwani

    • எழுதியவர், பிராச்சி குல்கர்னி
    • பதவி, பிபிசி மராத்தி

“கனவு நனவாகிறது.” கஷிஷ் மெத்வானியின் சாதனைகளைப் பற்றிப் பேசும்போது, இந்த வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கும்.

இந்தியாவின் உயர்தர கல்வி நிறுவனத்தில் நரம்பியல் அறிவியலில் முதுகலை பட்டம் பெறுவது, பின்னர் ‘மிஸ் இந்தியா இன்டர்நேஷனல்’ ஆக மாறுவது, இப்போது இவை அனைத்தையும் விட்டுவிட்டு நாட்டுக்கு சேவை செய்யப் பாதுகாப்புப் படைகளில் இணைவது – கஷிஷ் மெத்வானி இவை அனைத்தையும் சாதித்துக் காட்டியுள்ளார்.

குர்முக் தாஸ் மற்றும் ஷோபா மெத்வானி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார் கஷிஷ். கஷிஷின் தந்தை பாதுகாப்புத் அமைச்சகத்தின் தர உத்தரவாதத் துறையில் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஆவார். அவரது தாய் ஷோபா மெத்வானி புனேவில் உள்ள ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியராக இருந்தார்.

கஷிஷ் மற்றும் அவரது சகோதரி இருவரும் ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் படித்தனர். அவர்கள் இருவரும் ஒரு சாதாரண மாணவரைப் போலவே வளர்க்கப்பட்டனர். கஷிஷ் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது, மற்றொரு மாணவரின் பெற்றோர் அவரது தாயிடம், “உங்கள் மகள் சாதாரணமானவள் அல்ல, அவள் வாழ்க்கையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடிப்பாள்” என்று கூறியிருந்தார்.

By admin