• Sat. Apr 26th, 2025

24×7 Live News

Apdin News

கஸ்தூரிரங்கன்: இரவில் ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இஸ்ரோ தலைவரான பின்னணி

Byadmin

Apr 25, 2025


கே. கஸ்தூரிரங்கன்

பட மூலாதாரம், Getty Images

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை கே. கஸ்தூரிரங்கன் செலுத்தியிருக்கிறார்.

1940களின் இறுதியில் கேரளாவின் எர்ணாகுளத்தில் இரவு நேரத்தில் ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான் அந்தச் சிறுவன்.

வானில் தெரிந்த சந்திரனும் நட்சத்திரங்களும் அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்ததோடு, ஆர்வத்தையும் தூண்டின.

இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தச் சிறுவனின் உறவினரான நாராயணமூர்த்தி, “நீ பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கணிதத்தையும் இயற்பியலையும் நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

By admin