காணொளி: தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்திக்கு அடித்தளமிட்ட ‘காற்றாலை மனிதர்’
இப்போது தமிழகம் 12 ஆயிரம் மெகா வாட் அளவுக்கு காற்றாலை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிலையில், குஜராத் 13 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்கிறது. தமிழகம் இதில் முன்னிலையை எட்டுவதற்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தளமிட்டவர் கஸ்துாரி ரங்கையன்.
தமிழ்நாடு மின் வாரியம் காற்றாலை நிறுவும் முயற்சியில் தோல்வியடைந்த பின், தனியாருக்கு அழைப்பு விடுத்தபோது, அதற்கான முதல் முயற்சியைச் செய்து அதில் மாபெரும் வெற்றியை ஈட்டியவர் என்று தொழில் அமைப்பினர், காற்றாலை சங்கத்தினர் பலரும் ஒன்றாக கைகாட்டுவது கஸ்துாரி ரங்கையனைத்தான்.
அந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளை பிபிசி தமிழிடம் விளக்கினார் கஸ்துாரி ரங்கையன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு