• Sat. Feb 22nd, 2025

24×7 Live News

Apdin News

காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் – அவர் கூறுவது என்ன?

Byadmin

Feb 20, 2025


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் குழப்பம்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு எதிராக, 15க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முற்றுகையிட்டு புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், “கட்சி விதிகளின்படி பதவிக்காலம் முடிந்த காலாவதியான தலைவர்கள் புகார் கூறுகிறார்கள். கட்சியை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தி வருகிறோம்” என்று செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புகாரில் உள்ள விபரங்கள்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரான செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு அடுத்ததாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஆரம்பத்தில் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய அவர், புதிய பாரதம், புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளில் இதற்கு முன்பு இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவருக்கு, மாநில பட்டியலினப் பிரிவு தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.

By admin