• Sun. Apr 20th, 2025

24×7 Live News

Apdin News

காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

Byadmin

Apr 17, 2025


காங்கோவில் படகு தீப்பிடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வடமேற்கு காங்கோவில் உள்ள மடான் குமு துறைமுக பகுதியில் இருந்து போலோம்பா பகுதிக்கு பயணித்த மோட்டார் படகில் சுமார் 400 பேர் பயணம் செய்தனர்.

பன்டாக்கா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பயணிகள் உயிர் தப்பிப்பதற்காக படகில் இருந்து அடுத்தடுத்து ஆற்றில் குதித்து உள்ளனர்.

அப்போது படகும் ஆற்றில் கவிழ்ந்த நிலையில், படகில் இருந்து 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 100 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண் ஒருவர் சமையல் செய்ததே படகு தீப்பிடித்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin