• Tue. Nov 26th, 2024

24×7 Live News

Apdin News

காசிமா: சென்னை ஆட்டோ ஓட்டுநரின் மகள் கேரம் உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக 3 தங்கம் வென்றது எப்படி?

Byadmin

Nov 26, 2024


காசிமா, கேரம் உலகக்கோப்பை

பட மூலாதாரம், BBC/ Daniel

சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா.

ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன் பயணத்துக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. காசிமாவின் அண்ணன் அப்துல் ரஹ்மான் கேரம் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார். “அண்ணா, தேசிய சாம்பியன் ஆன போது அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது, அவருக்கு கிடைத்த கவனத்தைப் பார்த்த போது, எனக்கும் கேரம் ஆட வேண்டும், சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது” என்கிறார் காசிமா.

காசிமா, கேரம் உலகக்கோப்பை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காசிமாவின் அக்கா அசீனாவும் சிறு வயதில் கேரம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். “அப்போது, எனது பாட்டி என்னை விளையாட அனுமதிக்கவில்லை. எனது தம்பி வெற்றி பெற்றவுடன் காசிமாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. என் தந்தையின் கனவு நிஜமானது என்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறும் அவர், வீட்டில் உள்ள முகக் கண்ணாடியில் “I am a world champion” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன் காசிமா எழுதி வைத்திருந்ததை காண்பிக்கிறார்.

உலக சாம்பியன் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்ததா என்று காசிமாவிடம் கேட்டால், “கண்டிப்பாக இருந்தது, அதனால்தான் வெல்ல முடிந்தது. உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் விளையாடினேன்” என்றார்.

By admin