• Fri. Oct 10th, 2025

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கிறது? பிபிசி கண்டது என்ன?

Byadmin

Oct 10, 2025


கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
படக்குறிப்பு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இயங்கிய ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தைக் குடித்த மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு ஸ்ரேசன் நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்ரிஃப்’ என்ற இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த மருந்தைக் குடித்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு வாந்தியும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைய ஆரம்பித்தனர்.



By admin