• Sat. Oct 5th, 2024

24×7 Live News

Apdin News

காஞ்சிபுரம்: சாம்சங் ஊழியர் தொழிற்சங்கம் தொடங்க நிர்வாகம் அனுமதி மறுப்பது ஏன்? ஐந்துமுறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

Byadmin

Oct 5, 2024


சாம்சங் ஊழியர் போராட்டம்
படக்குறிப்பு, இந்திய அரசின் சட்டங்களை நிறுவனம் மீறுவதாக சாம்சங் இந்தியா தொழிற்சாலையின் தொழிற்சங்க (சி.ஐ.டி.யு) தலைவர் முத்துக்குமார் கூறுகிறார்.

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

காஞ்சிபுரத்தில் சாம்சங் இந்தியா நிறுவனத்துக்கு எதிராக 25 நாள்களைக் கடந்தும் 900க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்திய அரசின் சட்டங்களை சாம்சங் இந்தியா நிறுவனம் மதிக்காததுதான் பிரச்னை நீடிக்க காரணம்” எனக் கூறுகின்றனர் தொழிலாளர்கள்.

ஆனால், ஊதியம், பணிச்சூழல், சலுகை என தொழிலாளர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக உள்ளதாகக் கூறுகிறது, சாம்சங் இந்தியா நிறுவனம்.

சாம்சங் இந்தியா நிறுவனத்துடன் ஐந்து முறை அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்? தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வது ஏன்?

By admin