• Mon. Aug 18th, 2025

24×7 Live News

Apdin News

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

Byadmin

Aug 18, 2025


அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.  யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.  உயிரிழந்த நபர் தனது நிலத்திலிருந்து காட்டு யானையை விரட்ட முயன்றபோதே தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin