கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலில் இருந்து ஏ9 வீதி வழியாக டிப்போ சந்தி வரை சென்றது.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
The post காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் போராட்டம்! appeared first on Vanakkam London.