• Mon. Aug 3rd, 2026

24×7 Live News

Apdin News

காணாமல் போன தோழியை தேடி கண்டம் விட்டு கண்டம் 17,000 கிமீ சென்ற பெண் – காத்திருந்த அதிர்ச்சி

Byadmin

Aug 3, 2026


செலின் நீண்ட பொன்னிற முடியுடன் கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார், விளிம்பு அமைப்புக் கொண்ட மேலாடை அணிந்துள்ளார். ஜஸ்டின் நீண்ட அடர் பழுப்பு நிற முடியுடன் ஒரு கையைத் தனது கன்னத்தில் வைத்தபடி புன்னகைக்கிறார். அவர் லேஸ் விளிம்பு கொண்ட வெள்ளை நிற மேலாடை அணிந்துள்ளார்.

பட மூலாதாரம், Justine Ropet

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, ஜஸ்டின் “அதே கேள்விகளுடன் விழித்தெழுந்து, அதே கேள்விகளுடன் தூங்கச் சென்றார்”. இந்த ஆண்டு இறுதியாக தனது சிறுவயதுத் தோழியான செலின் க்ரேமருக்கு என்ன நடந்தது என்பது குறித்த சில பதில்களை அவர் பெற்றார்.

“செலின் எப்போதும் என் நினைவிலேயே இருந்தாள், அவள் அந்த (காட்டிற்குள்) தான் இருக்கிறாள் என்றால் – எங்களால் ஏன் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நான் எப்போதும் யோசித்துக்கொண்டே இருந்தேன்” என்று அந்த 33 வயதான ஸ்கூபா பயிற்சியாளர் கூறுகிறார்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த செலின் க்ரேமர், கடைசியாக 2023 ஜூன் 17 அன்று ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கில் உள்ள வாராட்டா என்ற நகரில் உயிருடன் காணப்பட்டார்.

அழகிய இடமான பிலோசபர்ஸ் நீர்வீழ்ச்சியை நோக்கி ஒரு மழைக்காட்டில் அவர் நடைபயணம் மேற்கண்டிருந்தார். இரண்டு வாரங்களாக அவர் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ளத் தவறியதை அடுத்து, அவர்கள் அதிகாரிகளிடம் சென்றனர்.

நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் பாதையின் தொடக்கத்தில் செலினின் காரை போலீசார் கண்டுபிடித்தனர்.

By admin