• Thu. May 29th, 2025

24×7 Live News

Apdin News

காணி அபகரிப்பு வர்த்தமானியை மீளப்பெற்றது அநுர அரசு!

Byadmin

May 28, 2025


வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அநுர அரசு மீளப்பெற்றுள்ளது.

அரசால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் திகதியிடப்பட்டு 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின் அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கடுமையான எதிர்ப்பை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் வெளிப்படுத்தியிருந்ததுடன் அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், வடக்கு மாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசு இன்று மீளப்பெற்றுள்ளது.

By admin