இது தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டம் அஸ்வராப்பேட்ட மண்டலத்திலுள்ள கண்டலம் வனப்பகுதி. இங்கு உள்ள மலைப்பகுதியில் ஒரேயொரு குடும்பம் மட்டும் தனியாக வசித்துவருகிறது. இந்த மலைப்பகுதியில் குறைந்தது 3 கிலோமீட்டருக்கு வேறு யாரையும் பார்க்க முடியாது. ஆனால், குருகுண்ட்ல ரெட்டையா தன் குடும்பத்துடன் கடந்த 25 ஆண்டுகளாக தனியே வசித்துவருகிறார்.
காணொளி: அடர் வனத்தில் தனியே வசிக்கும் குடும்பம் – வெளியாட்களை கண்டால் குடும்பத்தலைவர் ஓடிவிடுவது ஏன்?