கார் ஓட்டிச் சென்ற மணமகள்: பஞ்சாப் மாநிலத்தின் ‘தார் வாலா ஜோடி’
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த பாவ்னி தல்வார் வர்மா, தனது திருமணத்தன்று லெஹங்கா அணிந்து ஒரு எஸ்யூவி (SUV) காரை ஓட்டிக்கொண்டு தன் மாமியார் வீட்டிற்கு வந்தார். புதுமணத் தம்பதியினரின் இந்த தருணம் கேமராவில் படம்பிடிக்கப்பட்டது, பின்னர் அது சமூக ஊடகங்களில் வைரலாகியது. இந்த காணொளியை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
தம்பதியினரின் கூற்றுப்படி, அவர்களின் திருமணம் அக்டோபரில் நடந்தது, ஆனால் இந்தக் காணொளி டிசம்பர் 3 அன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. இந்த காணொளி வைரலான பிறகு, மக்கள் அவர்களை எளிதில் அடையாளம் காணத் தொடங்கினர்.
“எனக்கு தார் கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். திருமணம் முடிந்த பிறகு, மாமியார் வீட்டுக்கு காரில் போக முடிவு செய்திருந்தேன். அது ஒரு வேடிக்கையான காணொளி, 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளுடன் இவ்வளவு வைரலாகும் என்று எனக்குத் தெரியாது. மக்கள் இப்போது எங்களை ‘தார் வாலா ஜோடி’ என்று அழைக்கிறார்கள்.” என்கிறார் பாவ்னி தல்வார் வர்மா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு