காணொளி: இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்
காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு ஹமாஸ் வசம் இருந்த எஞ்சிய 20 பணய கைதிகளும் இஸ்ரேல் வந்தடைந்தனர்.
அதே நேரம், உயிரிழந்த பணயக் கைதிகளின் உடல்கள் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை. டிரம்ப் முன்மொழிந்த சண்டை நிறுத்த ஒப்பந்தப்படி, அவர்களின் உடல்களும் ஒப்படைக்கப்படும்.
உயிருடன் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதை அறிவித்த ஹமாஸ், உயிரிழந்தவர்களின் உடல்கள் பின்னர் ஒப்படைக்கப்படும் என கூறி உள்ளது. ஆனால், அது எப்போது என்பது குறித்து இன்னும் தெளிவில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு