காணொளி: சிங்கங்களின் நடுவே நாய்க்குட்டி – வேட்டையாடாமல் விட்டது ஏன்?
குஜராத்தில் நாய்க்குட்டியை நெருங்கி வந்த சிங்கங்கள் அதை வேட்டையாடமல் சென்றன. கோவாயா கிராமத்தில் கடந்த 18-ஆம் தேதி இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இரவு நேரத்தில் கிராமத்திற்குள் நுழைந்த சிங்கங்கள் நாய்குட்டிகளை சூழ்ந்துகொண்டன. சிங்கத்தை கண்டதும் ஒரு நாய்க்குட்டி அங்கிருந்து தப்பி ஓடியது. ஓடிய நாய்க்குட்டியை துரத்திச் சென்ற சிங்கங்கள் இறுதியில் அதை வேட்டையாடாமல் விட்டுவிட்டன.
பிபிசியிடம் இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரி, “சிங்கங்கள் பொதுவாக ஆடுகளையோ அல்லது நாய்க்குட்டிகளையோ வேட்டையாடுவதில்லை. இது அவற்றின் இயல்பு. சிறுத்தைகள் ஆடுகளை நாய்க்குட்டிகளை தூக்கிச் செல்லும், ஆனால் சிங்கங்கள் பொதுவாக அப்படிச் செய்வதில்லை. அவை குட்டிகளுடன் விளையாடிவிட்டு, அவற்றை விட்டுவிடும் என கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு