காணொளி: சீனாவின் எஸ்சிஓ மாநாட்டில் வழிகாட்டும் பெண் ரோபோ
சீனாவின் தியான்ஜினில் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்கும் எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பெண் ரோபோ ஒன்று உதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட இந்த இயந்திரப் பாவை, தியான்ஜினில் நடக்கும் எஸ்சிஓ உச்சிமாநாட்டிற்காக உருவாக்கப்பட்ட உதவியாளர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக உரையாடலின் போது பேசிய அந்த ரோபோ , “நான் பல மொழிகளில் தகவல் வழங்குவேன். நிகழ் நேர தகவல் வழங்குவது, நெறிமுறைக்கேற்ப தொடர்பு கொள்வது ஆகிய திறன்களைக் கொண்டுள்ளேன்.
சர்வதேச பிரதிநிதிகள், ஊடகப் பணியாளர்கள் மற்றும் உச்சிமாநாட்டு அமைப்பாளர்களிடையே தடையற்ற தகவல்தொடர்பை எளிதாக்க, எனது அமைப்புகள் மேம்பட்ட தரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.” என கூறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு