காணொளி: சீனா, இந்தியா மட்டுமல்ல – ஐரோப்பிய நாடுகளையும் சாடிய டிரம்ப்
சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன என, ஐ.நாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
ஐ.நாவில் செப், 23 அன்று உரையாற்றிய டொனால்ட் டிரம்ப்,
“சீனா மற்றும் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கி, நடந்து வரும் போருக்கு நிதியளிக்கின்றன.
ஆனால், மன்னிக்க முடியாத அளவுக்கு நேட்டோ நாடுகளும் ரஷ்ய பொருட்களை தொடர்ந்து வாங்குகின்றன.
இது 2 வாரங்களுக்கு முன் தான் தெரிந்தது. நான் மகிழ்ச்சியாக இல்லை.
இதை யோசியுங்கள்.
அவர்கள் தங்களுக்கு எதிரான போருக்கு நிதியளிக்கிறார்கள்.
இதுபோன்று யாராவது கேள்விப்பட்டு இருக்கிறார்களா?
இந்த போர் முடிவு ஒப்பந்தம் செய்ய ரஷ்யா தயாராக இல்லையெனில், அமெரிக்கா கடுமையான வரிவிதிக்க தயாராக உள்ளது.
இது மோசமான நிலையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் என நம்புகிறேன்.
ஆனால், அந்த வரிகள் பயனளிக்க, இங்கே கூடியுள்ள ஐரோப்பிய நாடுகள் அதே மாதிரியான நடவடிக்கைகளை எங்களுடன் சேர்ந்து எடுக்க வேண்டும்.” என பேசினார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு