காணொளி: ஜம்மு காஷ்மீரில் பூஜைக்காக மக்கள் கூடியிருந்த பகுதியில் திடீர் வெள்ளம் – 12 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிஷ்ட்வார் மாவட்டத்தில் சசோடி எனும் கிராமத்தில் ஒரு கோவில் பூஜைக்காக நிறைய பேர் கூடியிருந்த பகுதியில் இந்த மேகவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மலை அடிவாரத்தில் இருந்த நிறைய வீடுகள் இந்த திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாகவும் இதுவரை 12 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு