காணொளி: நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் ஹாக்கா நடனம் ஆடிய எம்பி
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி ஹாக்கா நடனம் ஆடியதால் நாடாளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
அக்டோபர் 9ஆம் தேதி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி ஒருவர் உரை நிகழ்த்திய பிறகு முன் அனுமதி பெற்று பாட்டு பாடினார். பின் அவர் மௌரி பழங்குடிகளின் பாரம்பரிய ஹாக்கா நடனம் ஆடினார்.
அரங்கில் இருந்தவர்களும் நடனமாடினர். நாடாளுமன்ற அவைத் தலைவர் இது செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்தாக கூறினார். பின் அவையை இடைநிறுத்தம் செய்தார்.
நியூசிலாந்து நாடாளுமன்ற கட்டுப்பாடுகளின் படி, பாடல் அல்லது ஹக்கா நடனமாட அனுமதி பெறுவது அவசியமாகும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு