காணொளி: பெண் கல்வியை ஊக்குவிக்கும் பெயர்ப்பலகைகள்
ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள கேரா கனி கிராமத்தில் இப்போது வீடுகளின் முன்பாக ஆண்களின் பெயர்கள் அல்ல, உயர் கல்வி பயின்ற கிராமத்துப் பெண்கள் அல்லது சிறுமிகளின் பெயர்ப் பலகைகள் வைக்கப்படுகின்றன.
சில மாதங்களுக்கு முன், கிராமப் பஞ்சாயத்தில் உள்ள வீடுகளுக்கு வெளியே பெண்களின் பெயர்களைக் கொண்ட பெயர்ப் பலகைகளை வைப்பதாக கிராமப் பஞ்சாயத்து முடிவெடுத்தது. அதன் பிறகு, 30 பெண்களின் பெயர்ப் பலகைகள் வீடுகளின் முன் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களைக் கொண்ட பெயர்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள சில வீடுகளும் உள்ளன. இந்த வீடுகளில் ஒன்று, வணிகவியலில் பட்டம் பெற்ற தமன்னா மற்றும் ஹிந்தியில் முதுகலைப் பட்டம் பெற்ற அவரது தாய் ஆஷா ராணி ஆகியோருக்குச் சொந்தமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு