காணொளி: முடிவுக்கு வருமா வரி பிரச்னை? அமெரிக்கா சொல்வது என்ன?
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில், டொனால்ட் டிரம்பின் வரிகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்த 25 சதவிகித வரிகள் இம்மாத தொடக்கத்திலும் கூடுதலாக விதிக்கப்பட்ட 25 சதவிகித வரிகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதலும் அமலுக்கு வந்துள்ளன. இதனால், இந்தியாவின் பல தொழில்துறைகள் பாதிக்கப்படக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால், அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் கூறிய புதிய கருத்துகள் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளன.
அமெரிக்க கருவூலச் செயலாளர் என்ன கூறினார்? இதனால் இந்தியா – அமெரிக்காவின் வர்த்தக உறவு மேம்படுமா?
முழு விவரம் காணொளியில்..
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு