காணொளி: யுக்ரேன் சிறுவன் பேசும்போது அழுத மொழிபெயர்ப்பாளர்
யுக்ரேன் சிறுவன் தனது தாயை இழந்த தருணம் பற்றி பேசும்போது மொழிபெயர்ப்பாளர் கண்ணீர் விட்ட தருணம் இது.
2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மருத்துவமனை மீதான ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 11 வயது சிறுவன் காயமடைந்தார். ரோமன் ஒலெக்சிவ் எனும் அந்த சிறுவன் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பேசும்போது, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
“எல்லோருக்கும் வணக்கம், என் பெயர் ரோமன். எனக்கு 11 வயது. நான் யுக்ரேனை சேர்ந்தவன். இப்போது ல்வீவ் நகரில் வசிக்கிறேன்.”
“2022 ஜூலை 14-ஆம் தேதி, நானும் என் அம்மாவும் வின்னிட்சியா நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்தோம். அப்போது ரஷ்யாவின் மூன்று ஏவுகணைகள் அந்த கட்டடத்தை தாக்கின. அதுதான் நான் கடைசியாக என் அம்மாவை பார்த்த தருணம். அதுதான் கடைசியாக நான் என் அம்மாவை பார்த்ததும் அவருக்கு குட்பை சொன்னதும் ஆகும்.” என்று அந்தச் சிறுவன் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு