காணொளி: 10 நாள் சர்க்கரை சாப்பிடாவிட்டால் முகம் பொலிவு பெறுமா?
இந்தியாவின் நகர்ப்புற குடும்பங்களில் 56% பேர் கேக், பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றை மாதத்திற்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட முறை உட்கொள்கிறார்கள், இதில் 18% பேர் தினமும் அவற்றை உட்கொள்கிறார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த ஆய்வில் பங்கேற்ற கணிசமானோர் (55%) இனிப்புகளைத் தவிர்க்க முடியாது என்றும் ஆனால் அதில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கவேண்டுமென விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.
இப்போதெல்லாம், எந்த உணவுப் பொருளை எடுத்தாலும் அதில் எவ்வளவு சர்க்கரை அளவு உள்ளது என தெரிந்துகொள்ள நாம் ஆர்வமாக இருக்கிறோம். ‘அதிக சர்க்கரை’ உடலுக்கு கேடு என்பதை பலரும் உணரத் தொடங்கியுள்ளனர்.
வெள்ளை சர்க்கரை சிறந்ததா அல்லது நாட்டுச் சர்க்கரை சிறந்ததா என்பதைக் கடந்து, அனைத்து வகையான சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களையும் குறிப்பிட்ட நாட்களுக்கு தவிர்ப்பதே சர்க்கரையை தவிர்க்கும் சவால் (Sugar cut challenge) ஆகும்.
‘சர்க்கரையை 10 நாட்கள் தவிர்த்ததால் முகம் பொலிவு பெறுகிறது’, ‘எடை குறைந்துவிட்டது’ என இணையத்தில் பலரும் இதுகுறித்து பதிவிடுவதைப் பார்க்க முடிகிறது.
சர்க்கரையை முழுவதும் தவிர்த்தால் நம் உடலில் என்ன நடக்கும்? விரிவாக காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.