• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

காதலன் குளத்தில் மூழ்கிப் பலி! காதலி உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்!

Byadmin

Apr 18, 2025


தாமரைப் பூ பறிக்கும்போது காதலன் குளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு, கவலையில் காதலி தவறான முடிவெடுத்து உயர்மாய்துள்ளார்.

யாழ். தென்மராட்சி, வரணி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று 23 வயது இளைஞர்  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

குளத்தில் தாமரைப் பூ பறித்தபோது அவர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

அந்த இளைஞறின் மரண செய்தியை அறிந்த 18 வயதான காதலி இன்று அதிகாலை வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

சுட்டிபுரத்துக்கு அருகிலுள்ள குளமொன்றில் இளைஞரின் சடலம் மிதப்பதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காகப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

The post காதலன் குளத்தில் மூழ்கிப் பலி! காதலி உயிர்மாய்ப்பு!! – யாழில் சோகம்! appeared first on Vanakkam London.

By admin