• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

‘காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி ரத்தத்தை செலுத்திய பெண்’ – ஆந்திராவில் உண்மையில் என்ன நடந்தது?

Byadmin

Jan 27, 2026


ஆந்திரா, கர்நூல்

பட மூலாதாரம், UGC

(எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில தகவல்கள் சங்கடம் ஏற்படுத்தலாம்)

ஆந்திராவில், தான் காதலித்த நபர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், அந்த நபரின் மனைவிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் ஒரு மருத்துவர்.

அவரது கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நூல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் ஜனவரி 9-ம் தேதி நடந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கர்நூல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவர் ஒருவர், பணி முடிந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். கே.சி. கால்வாய் கரை அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கீழே விழுந்த மருத்துவருக்கு உதவுவது போல நடித்த இருவர், அவருக்கு தொற்றுள்ள ரத்தத்தைச் செலுத்தியுள்ளனர்.

By admin