பட மூலாதாரம், Getty Images
இன்றைய தினம் (04/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
விக்னேஷ்வரி (24) புதன்கிழமை காலை இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் சாலை விபத்தில் இறந்திருக்கலாம் என்று பெற்றோர்கள் நினைக்க, காவல்துறை விசாரணை அது ஒரு கொலை என்றும் அந்தக் கொலையைச் செய்தது அந்தப் பெண்ணின் காதலன் என்றும் உறுதிப்படுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரி புதுக்கோட்டையைச் சேர்ந்த தீபன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தீபனின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபன் கடந்த மாதம் 28ஆம் தேதியன்று விக்னேஷ்வரியை, பெண் வீட்டார் முன்னிலையில் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தார்.
அதையொட்டி, நிச்சயத்திற்குத் தேவையான ஆடைகளை வாங்கச் சென்றுள்ளார். தீபன் தன்னை ஏமாற்றிவிடுவாரோ என்ற அச்சத்தில் விக்னேஷ்வரி அவரைப் பின்தொடர்ந்துள்ளார். மேலும் தனது பெற்றோர்களிடம் தீபனுடன் செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. விக்னேஷ்வரியின் பெற்றோர் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர்,” என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.