• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

காந்தாரா சாப்டர் 1 விமர்சனம்: ரிஷப் ஷெட்டியின் மாயாஜாலம் மீண்டும் எடுபட்டதா?

Byadmin

Oct 2, 2025


காந்தாரா சாப்டர் 1 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பட மூலாதாரம், X/hombalefilms

படக்குறிப்பு, காந்தாரா சாப்டர் 1 இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கடந்த 2022-ல் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வெளியான காந்தாரா திரைப்படம் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது காந்தாரா சாப்டர் 1 இதன் முன்கதையாக வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை எந்தளவிற்கு பூர்த்தி செய்துள்ளது?

காந்தாராவில் ரிஷப் ஷெட்டியின் கதாபாத்திரம் இறுதியாக ஒரு இடத்தில் மறைந்து போகும். அந்த இடத்தில் இருந்து சாப்டர் 1 தொடங்குகிறது.

காந்தார பகுதியின் பிரமாண்டம், ஈஸ்வரன் பூந்தோட்டம் பகுதியின் தனித்துவம், முன்பு பன்றியின் வடிவத்தில் இருந்து இப்போது புலியின் வடிவத்தில் தோன்றும் பஞ்சுர்லி என பல்வேறு கற்பனை கூறுகளுடன் கதை அமைந்துள்ளது

திரைப்படத்தின் கதை என்ன?

பெர்மே என்ற கதாபாத்திரமாக வருகிறார் ரிஷப் ஷெட்டி.

பட மூலாதாரம், X/hombalefilms

படக்குறிப்பு, பெர்மே என்ற கதாபாத்திரமாக வருகிறார் ரிஷப் ஷெட்டி.

பல நூற்றாண்டுகளுக்கு முன் கடம்பா வம்சம் பங்காரா ராஜ்யத்தை ஆண்டுவந்துள்ளது.

By admin