• Sun. Mar 1st, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி எங்கே, எப்போது மரணம் அடைந்தார்? இரானில் என்ன நடக்கிறது? முழு விவரம்

Byadmin

Mar 1, 2026


காமனெயி மரணம், இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி (கோப்புப் படம்)

இரான் நாட்டின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் காமனெயி மரணம் குறித்து பதிவிட்டிருந்தார்.

சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது நடத்திய மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடர்ந்து காமனெயி மரணச் செய்தி வெளியாகியுள்ளது.

“டெஹ்ரானில் உள்ள காமனெயி இல்லம் ஒரு தீவிரமான திடீர் தாக்குதலில் அழிக்கப்பட்டது. 86 வயதான அந்த மதத் தலைவர் உயிரிழந்ததற்கான பல அறிகுறிகள் உள்ளன,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் அமைந்துள்ள நான்கு வளைகுடா அரபு நாடுகளான – பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ஆகியவற்றின் மீது இரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவித் தாக்கியது.

By admin