• Tue. Mar 3rd, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி கொலைக்குப் பிறகு இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்?

Byadmin

Mar 3, 2026


இரான், ஆயத்துல்லா அலி காமனெயி

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக இரானின் அதிஉயர் தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி, பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் காமனெயியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும், இரானின் இஸ்லாமிய ஆட்சியின் பிற மூத்த தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த 86 வயதான காமனெயியின் மரணத்தை முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார், பின்னர் இரானிய அரசு தொலைக்காட்சியால் உறுதிப்படுத்தப்பட்டது. காமனெயி உலகின் மிக நீண்ட காலம் பதவியில் இருந்த தலைவர்களில் ஒருவர்.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, இரானில் இரண்டு உச்ச தலைவர்கள் மட்டுமே உள்ளனர்: ஆயதுல்லா ருஹோல்லா கொமேனி மற்றும் ஆயதுல்லா அலி காமனெயி.

இரானில் அதிஉயர் தலைவர் மிகவும் சக்திவாய்ந்த பதவியை வகிக்கிறார். அவர் நாட்டின் தலைவராகவும், இரானின் உயர்மட்ட புரட்சிகர காவல்படை (IRGC) உட்பட ஆயுதப் படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார்.

By admin