• Mon. Mar 2nd, 2026

24×7 Live News

Apdin News

காமனெயி கொல்லப்பட்டதற்கு இந்தியாவில் சென்னை முதல் காஷ்மீர் வரை என்ன எதிர்வினை?

Byadmin

Mar 2, 2026


ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தும் மக்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆயத்துல்லா அலி காமனெயியின் மரணத்திற்குப் பிறகு ஸ்ரீநகரில் போராட்டம் நடத்தும் மக்கள்.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் நாட்டின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.

இரான் அரசு ஊடகம் காமனெயியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது. சனிக்கிழமை நடந்த தாக்குதல்களில் காமனெயி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னர் தெரிவித்திருந்தார்.

காமனெயி கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை, காஷ்மீர் மற்றும் லக்னோவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

ராயப்பேட்டையில் உள்ள பீட்டர்ஸ் சாலையில் புது கல்லூரி அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷா நவாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்களுடன் வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

By admin